செவ்வாய், 2 ஜனவரி, 2024

உளுந்து பயிரைத் தாக்கும் ஆந்தராக்னோஸ் நோய்



உளுந்து பயிரைத் தாக்கும் ஆந்தராக்னோஸ் நோய்

அறிகுறிகள்

பயிரின் அனைத்து பகுதிகளையும், பயிரின் எந்த நிலையையும் இந்த நோய் தாக்கும்.

வட்ட வடிவில், கருப்பு நிற நீரில் அமிழ்ந்த புள்ளிகள் இலைகள் மற்றும் காய்களில் காணப்படும்.

 இந்த புள்ளிகளின் நடுவில் கருப்பு நிறமாகவும், ஓரங்களில் அடர் ஆரஞ்சு நிறத்துடனும் காணப்படும்.

தீவிர தாக்குதலின் போது, தாக்கப்பட்ட பகுதிகள் உதிர்ந்து விடும்.

விதை முளைக்க ஆரம்பித்தவுடன், நாற்றுக்கள் கருக ஆரம்பித்து விடும்.

பூஞ்சாண் விதைகள் மற்றும் பயிரின் குப்பைகளில் உயிர் வாழும்.

காற்று வழி பரவும் கொனிடியா மூலம் இந்த நோய் பரவும்.

குளிர் மற்றும் ஈரமான காலங்களில் நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்.

கட்டுப்பாடு

கார்பன்டசிம் 2 கிராம் / கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்தல்.

தாக்கப்பட்ட பயிரின் குப்பைகளை அகற்றி, அழித்தல்.

மான்கோசெப் 2 கிராம் / லிட்டர் (அ) கார்பன்டசிம் 0.5 கிராம் /லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக