ஞாயிறு, 24 மார்ச், 2024

வெங்காய ஏற்றுமதிக்கான தடை காலவரையறையின்றி நீட்டிப்பு!

வெங்காய ஏற்றுமதிக்கான தடை காலவரையறையின்றி நீட்டிப்பு!

வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் உள்நாட்டில் விலைக் கட்டுக்குள் இருப்பதற்காக மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 8.12.2023 முதல் 31.3.2024 வரை தடை விதித்துள்ளது.

மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் இருப்பதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெங்காயத்தின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. நாட்டிலேயே அதிகளவு வெங்காயம் பயிரிடும் மகாராஷ்டிரத்தில் ஒரு குவிண்டால்(100 கிலோ) வெங்காயம் ரூ. 4,500க்கு விற்பனையான நிலையில், தற்போது குவிண்டாலுக்கு ரூ. 1,200 ஆக வெங்காய விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பது விவசாயிகளுக்கு மேலும் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாய சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும், தற்போது ஒரே ஏற்றுமதி குறியீட்டு எண் இருப்பதால் பெரிய வெங்காயத்துக்கு மத்திய அரசு ஏற்றுமதி தடை விதிக்கும்போதெல்லாம், சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதியும் தடை செய்யப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் பயிா் செய்துள்ள விவசாயிகள் போதிய விலையின்றி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம் போல், சின்ன வெங்காயம் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுவதில்லை. தென் மாநிலங்களில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பது தேவையற்றது.மத்திய அரசு விதித்துள்ள வெங்காய ஏற்றுமதி தடையால் விவசாயிகள் பலா் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்வதை தவிா்க்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த காலங்களைப் போல சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயரும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இம்மாத இறுதி வரை வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆசியாவின் வெங்காய ஏற்றுமதியில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக, இந்தியாவிலிருந்து தான் வெங்காய ஏற்றுமதியாகிறது. கடந்த மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக இந்தியாவிலிருந்து 2.5 மில்லியன் மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் தொடங்கி இந்தியாவின் வெங்காய ஏற்றுமதியை அதிகமாகச் சார்ந்திருக்கும் மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் மத்திய அரசின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேற்கண்ட நாடுகளில் வெங்காய விலை ஏற்றத்தைக் கண்டுள்ளதால் சீனா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர : YouTube Facebook Twitter Instagram


செவ்வாய், 19 மார்ச், 2024

நோய் எதிர்ப்பு திறன் கொண்ட குதிரைவால் சம்பா நெல்

நோய் எதிர்ப்பு திறன் கொண்ட குதிரைவால் சம்பா நெல்

மணல் கலந்த செம்மண் நிலத்தில், குதிரைவால் சம்பா நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:

பாரம்பரிய ரக நெல் சாகுபடியில், குதிரைவால் சம்பா ரக நெல்லும் ஒன்றாகும். இது, சன்ன ரகமாகும். நடவு நடவு செய்து, 125 நாட்களில் நெல் அறுவடைக்கு வரும். திருச்சி மாவட்டத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய ரகமாகும்.
 
நம்மூர் மணல் கலந்த செம்மண் நிலத்திற்கு நன்றாக வளர்கிறது. நெல் மஞ்சள் நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும். குறிப்பாக, குதிரைவால் சம்பா ரக நெல் முனை, குதிரையின் வால் போல் நீண்டிருப்பதால், இந்த பெயர் வரக் காரணமாக அமைந்தது. இதில், நோய், பூச்சி தாக்குதல் அறவே இல்லை. 

ஒரு ஏக்கருக்கு, 15 மூட்டை வரையில் நெல் மகசூல் பெறலாம். இந்த அரிசியில், நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால் அனைத்து வித சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. பல்வேறு விதமான நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது.
இவ்வாறு அவர் கூறினார்

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர : YouTube Facebook Twitter Instagram

திங்கள், 18 மார்ச், 2024

அவகோடா சாகுபடி; மாற்றி யோசித்த பொள்ளாச்சி விவசாயி

அவகோடா சாகுபடி; மாற்றி யோசித்த பொள்ளாச்சி விவசாயி

பொள்ளாச்சி: தென்னைக்கு மாற்றாக, அவகோடா பழப்பயிர் சாகுபடியில், பொள்ளாச்சி விவசாயி ஈடுபட்டுள்ளார்.

பொள்ளாச்சி சுற்றுப்பகுதி மற்றும் கேரள மாநில எல்லையோர பகுதியில், தென்னை மரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, நோய் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நோய் பாதித்த தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தேங்காய் விலை சரிவு, ஆதார விலை திட்டத்தில் கொப்பரை கொள்முதலும் கைகொடுக்காததால், தென்னை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்னை மரங்களுக்கு மாற்றாக, மாற்று பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில், காளியப்பகவுண்டன்புதுாரை சேர்ந்த விவசாயி உதயகிரி காசியப்பன், அவகோடா பழப்பயிர் சாகுபடி செய்துள்ளார்.

இவர், இரண்டரை ஏக்கர் பரப்பளவில், அவகோடா செடி சாகுபடி செய்து பராமரித்து வருகிறார். தற்போது, நடவு செய்து மூன்று மாதமான செடிகளுக்கு, தடுக்கு கட்டி வெயிலில் இருந்து பாதுகாத்து வருகிறார்.

அவர் கூறியதாவது:

தென்னை சாகுபடியில் நோய் பாதிப்பை தொடர்ந்து, மாற்று பயிராக அவகோடா என்கிற வெண்ணெய் பழத்தில், 'ஹாஸ்' வகையான செடி சாகுபடி செய்துள்ளேன். இஸ்ரேலில் இருந்து இந்த செடி வாங்கி வந்து நடவு செய்தேன். அவகோடா பழப்பயிர் சாகுபடியை, இப்பகுதியில் முதல் முறையாக மேற்கொண்டுள்ளேன். மொத்தம், இரண்டரை ஏக்கர் பரப்பளவில், 450 பழச்செடிகள் சாகுபடி செய்துள்ளேன். பராமரிப்பது தான் முக்கியமான விஷயம். மூன்று ஆண்டுகளுக்கு பிறகே மகசூல் கிடைக்கும்.

இது நல்ல தரமானதாக இருப்பதுடன், சமையல் மற்றும் அழகு சாதன பொருட்கள், மருந்து தொழில்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான மார்க்கெட்டிங் உள்ளது. வெளிநாடுகளில் இந்த பயிர் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர :


செவ்வாய், 12 மார்ச், 2024

காரைக்கால் விவசாயிகள் உண்ணாவிரதம், சாலை மறியல்

காரைக்கால்
விவசாயிகள் உண்ணாவிரதம், சாலை மறியல்

காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம், மறியலில் ஈடுபட்டனா். காரைக்கால் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில், தலத்தெரு பகுதி கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த 2020-21-ஆம் ஆண்டு விடுபட்ட காரைக்கால் பகுதியை சோ்ந்த 435 விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை காப்பீடு நிறுவனத்திடமிருந்து பெற்றுத்தரவேண்டும்; 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை சட்டப்பேரவையில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டதற்கு அரசாணை வெளியிடவேண்டும்; கடந்த ஆண்டு பருத்தி சாகுபடிக்கு உரிய காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரவேண்டும் போன்ர கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா்கள் ஏ.வி. சுப்பிரமணியன், ஆா். கமலக்கண்ணன் கலந்துகொண்டு பேசினா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பொன்.ராஜேந்திரன், ஆா்.ஏ.ஆா். கேசவன், சண்முகநாதன், பி.ஜி. சோமு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மதியழகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எஸ்.எம். தமீம், அ. வின்சென்ட், வே.கு.நிலவழகன் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளும், விவசாய சங்க நிா்வாகிகளும் கலந்துகொண்டனா். மறியல்: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறை அனுமதி தரவில்லை. இதுதொடா்பாக பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் போராட்டத்தில் ஈடுபட்டோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்த முயன்றபோது, இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியது. இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்ட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா். இந்த மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர :

திங்கள், 11 மார்ச், 2024

மிளகாய் பயிரைத் தாக்கும் சாம்பல் நோய்




மிளகாய் பயிரைத் தாக்கும்
சாம்பல் நோய்

அறிகுறிகள்

இலைப்பரப்பு உதிர்தல்.
இலையின் அடிப்புறம் வெள்ளை நிறப் பொடி போன்ற வளர்ச்சி காணப்படும்.
   
கட்டுப்பாடு

நனையும் கந்தகம் 0.25% (அ) டைனோகேப் (காரத்தேன்) 0.05% தெளிக்க வேண்டும்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர

----------------------------------------
My Amazon Store

Vegetables 

New Fresh Potato, 1kg


Kerala Coconut| Thenga| Nariyal, 1 Kg


Nuts and seeds 

Fruitri California Walnut Kernels, Premium Walnuts 500g


Dry Fruits (Anjeer/ Dry Figs 500g)


Dry Fruit Wala Premium Afghani Mamra Badam (Mamro Almond), 100 Grams


Garden items 

Grafted Peach roses Best color flower plant Climbing Rose Plant Perennial" Hybrid - 1 Healthy Live Decorative Flowering Plant 1.5 Ft Height in Nursery Grow Bag for Home Garden (Peach)


Kraft Seeds by 10CLUB Gardening Tools Kit - 10 Pcs (Cultivator, Fork, Trowels, Weeder, Garden Gloves, Pruner Cutter, Scissors, Free Flower Seeds Packet, Toolbox) | Gardening Tools Set For Home Garden


----------------------------------------

சனி, 9 மார்ச், 2024

நோய் எதிர்ப்பு சக்திக்கு கலியன் ரக சம்பா நெல்

நோய் எதிர்ப்பு சக்திக்கு கலியன் ரக சம்பா நெல்


கலியன் சம்பா நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:

பாரம்பரிய ரக நெல்லில், கலியன் சம்பா ரக நெல் தனியாகும். இது, தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப, 150 நாளில் விளைச்சல் தரக்கூடியது. சம்பா பருவ காலத்திற்கு ஏற்ற ரகமாகும்.

இந்த, நெல் மஞ்சள் நிறத்திலும், அரிசி சிவப்பு நிறத்திலும் இருக்கும். இந்த நெல்லில், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதால், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அறவே இருக் கலியன் சம்பா ரக நெல், நாகை மாவட்டத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் ரக நெல் என்பதால், நம்மூர் களிமண் நிலத்திலும், அதிகமாக சாகுபடி செய்யலாம். 

இந்த ரக நெல்லை, அரிசியாக மாற்றி உணவுப் பொருளாக சாப்பிடும் போது, நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, கலியன் சம்பா அரிசியை கஞ்சியாக காய்ச்சி குடித்து வந்தால், வயிற்றில் இருக்கும் ஆறாத புண்ணும் ஆறும். 
மேலும், கறுப்பு கவுனி அரிசிக்கு அடுத்தபடியாகநோய் எதிர்ப்பு ஆற்றல் நிறைந்தது. ஒரு ஏக்கருக்கு, 15 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும். இதை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது கணிசமான வருவாய் ஈட்ட ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர :

வெள்ளி, 8 மார்ச், 2024

இந்தியா நாடு முழுவதும் மார்ச் 10-ல் விவசாயிகள் ரயில் மறியல்

இந்தியா
நாடு முழுவதும் மார்ச் 10-ல் விவசாயிகள் ரயில் மறியல்

நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த பல்வேறு விவசாய அமைப்பினா் தலைநகா் தில்லி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க, போலீஸாா் பலத்த பாதுகாப்பு ஏற்படுகளை மேற்கொண்டுள்ளனா். ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநில எல்லைகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், தடை மீறி தில்லிக்குள் நுழைய விவசாயிகள் முயற்சித்து வருகின்றனா். தடையை மீறும் விவசாயிகளை போலீஸாா் கைது செய்து வருகின்றனா். மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளைத் தடுத்து வருகின்றனா். இதில் ஒரு விவசாயி உயிரிழந்ததோடு, பல விவசாயிகள் காயமடைந்தனா். இந்த நிலையில், நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மார்ச் 10ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும், தில்லியில் போராட்டம் நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளன. மேலும் நாடு முழுவதிலும் இருந்து மார்ச் 6ஆம் தேதி விமானம், ரயில், பேருந்து மூலம் தில்லி செல்ல திட்மிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர :

செவ்வாய், 5 மார்ச், 2024

மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி

இந்தியாவில் 2018 முதல் மக்காச்சோளத்தில் மக்காச்சோள படைப்புழுக்கள் ஊடுருவி அதிக தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. 

சமீப காலமாக அதிகரித்து வரும் மக்காச்சோளப் படைப்புழு தாக்குதலுக்குரிய காரணங்களை கண்டறிய பல்கலை ஆராய்ச்சி
செய்து வருகிறது. 

இறுதி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். 

ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி என்றளவில் சையான்ட்ரினிலிபுரோல் 19.8 சதவீதம் + தயோமீத்தாக்சம் 19.8 சதவீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். 

இறவை பாசனத்தில் தட்டை பயிர், எள், துவரை அல்லது சூரியகாந்தியும், மானாவாரியில் தீவன சோளத்தை வரப்பு பயிராக மூன்று வரிசை விதைக்க வேண்டும்.

படைப்புழுக்களின் தாய் அந்திப்பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும்.

படைப்புழுவின் பாதிப்பை கட்டுப்படுத்த மக்காச்சோளத்தின் பருவத்திற்கேற்ப பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்த வேண்டும்.

பயிர் முளைத்த 15 முதல் 20 நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி குளோரான்டரினிலிபுரோல் 18.5 எஸ்சி அல்லது புளுபென்டமைடு 480 எஸ்சி அல்லது 5 மில்லி அசாடிராக்டின் 1500 பி.பி.எம். தெளிக்க வேண்டும். 

முதிர் குருத்து நிலையான 35 முதல் 40 நாளில் ஏக்கருக்கு ஒரு கிலோ மெட்டாரைசியம் அனைசோபிலியே தெளிக்க வேண்டும் அல்லது லிட்டருக்கு 0.4 கிராம் எமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்ஜி / அல்லது லிட்டருக்கு 1.5மில்லி நொவலுரான் 10 சதவீத இ.சி.அல்லது 0.5 மில்லி ஸ்பைனிடிரோம் 11.7 எஸ்சி. தெளிக்க வேண்டும்.

பூ மற்றும் கதிர் உருவாகும் பருவத்தில் தேவைப்பட்டால் முதிர் குருத்து நிலையில் தெளிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பூச்சி கொல்லியினை தெளிக்க வேண்டும்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர : YouTube Facebook Twitter Instagram


ஞாயிறு, 3 மார்ச், 2024

கணிசமான வருவாய்க்கு பீரிபா பழம்

பீரிபா பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது: 

மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்களை சாகுபடி செய்துள்ளோம். அந்த வரிசையில், பீரிபா பழம் சாகுபடி செய்துள்ளோம்.
இது, மலை பிரதேசங்களில் அதிகமாக விளையும் சீதா பழ குடும்பத்தை சேர்ந்தவையாகும்.
நிலங்களில் சாகுபடி செய்யும் போது, தண்ணீர் தேங்காதவாறு வடிகால்வாய் வசதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் சேதமின்றி வளர சவுகரியமாக இருக்கும். இந்த பீரிபா பழத்தை பொருத்தவரையில், ஒரு காம்பிற்கு ஒரு பழம் மட்டுமே விளையும். சந்தையிலும் வரவேற்பு அதிகமாக உள்ளது. இந்த பீரிபா பழ சாகுபடி மூலமாக கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர : YouTube Facebook Twitter Instagram