சனி, 20 ஜனவரி, 2024

ரோஜா பயிரைத் தாக்கும் துரு நோய்



ரோஜா பயிரைத் தாக்கும் 
துரு நோய்

அறிகுறிகள்

எலுமிச்சை மஞ்சள் நிற கொப்பளங்கள் இலை மற்றும் தண்டின் கீழ்ப்பரப்பில் தோன்றும்.

பின்பு அவை கருஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.

பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாகி உருமாற்றமடைகின்றன மற்றும் முதிர்ச்சியடையாமல் உதிர்ந்துவிடும்.

பலகீனமான செடிகளில் நுனி கருகல் அறிகுறிகள் தோன்றும்.

மேலாண்மை

உதிர்ந்த இலைகளை சேகரித்து அழித்துவிட வேண்டும்.

நனையும் கந்தகம் 0.25% தெளிக்கவும்.

வெள்ளி, 19 ஜனவரி, 2024

பிளம் பயிரைத் தாக்கும் பிளம் வண்டு



பிளம் பயிரைத் தாக்கும்
பிளம் வண்டு

அறிகுறிகள்:

இலைகள் பூச்சிகளை வண்டுகள் உண்ணும்.

கட்டுப்பாடு:

சேதமடைந்த பயிர் பகுதிகளை சேகரித்து அழித்தல்.

கார்பைரில் 50wp 0.1%என்ற அளவில் இலைப் பரப்பின் மீது தெளிக்க வேண்டும்.

புதன், 17 ஜனவரி, 2024

தக்காளி பயிரைத் தாக்கும் ஊசித் துளைப்பான்




தக்காளி பயிரைத் தாக்கும் 
ஊசித் துளைப்பான் 

சேதத்தின் அறிகுறி:

இலைகள், தண்டுகள் சுரண்டியும், பழங்கள் ஊசி துவாரங்களுடன் காணப்படும்.
   
மேலாண்மை:

பூச்சி தாக்கிய பழங்கள், செடிகளை அகற்றி ஆழக்குழியில் புதைக்கவும்.

பயிர் சுழற்சியில் கத்தரி, மிளகாய் பயிரிடுவதை தவிர்க்கவும்.

பூச்சி தாக்காத நாற்றுகளை நடவும்.

ஏக்கருக்கு 16 இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கவும்.

தேவை ஏற்படின், ஏக்கருக்கு குளோரண்ட்ரனிலிப்ரோல் 18.5 % எஸ்.சி. 60 மி.லி. அல்லது சையாண்ட்ரணிலிப்ரோல் 10% ஓ.டி 60 மி.லி. அல்லது புளுபெண்டமைடு 20% டபிள்யூ.ஜி 60 மி.லி. அல்லது இண்டாக்சோகார்ப் 14.5% எஸ்.சி. 100 மி.லி. அல்லது அசாடிராக்டின் 1 அல்லது 5 சதவீதம் 200 - 300 மி.லி. தெளிக்கவும்.

செவ்வாய், 16 ஜனவரி, 2024

நெல் பயிரைத் தாக்கும் புகையான்



நெல் பயிரைத் தாக்கும் 
புகையான்

தாக்குதலின் அறிகுறிகள்:

நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.

தாக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து "தீய்ந்த மாதிரி" காட்சியளிக்கும். 

பழுப்புத் தத்துப்பூச்சியானது புல்தழைகுட்டை நோய், காய்ந்த குட்டை நோய் மற்றும் வாடிய குட்டை நோய் ஆகியவற்றைப் பரப்பும் உயிரியாகத் திகழ்கிறது.

முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாகக் காணப்படும். 

மேலும் பயிர்கள் சாய்ந்து விடும்.

தத்துப்பூச்சிகளால் ஏற்படும் "பயிர் தீய்ந்தது" போன்ற அறிகுறிகளை மற்ற "தீய்ந்த" அறிகுறிகளிலிருந்து அதில் இருக்கும் கரும் புகைப்பூசணத்தின் மூலமாக வேறுபடுத்த முடிகிறது. 

நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களையும் கண்டறிய முடிகிறது.

கட்டுப்படுத்தும் முறை:

பொருளாதார சேத நிலை அளவு: ஒரு குத்துக்கு 1 சிலந்தி இருக்கும் நிலையில் ஒரு துாருக்கு 2 பழுப்பு தத்துப்பூச்சி இருக்கலாம். 

சிலந்திகள் இல்லையெனில் துாருக்கு 1 என்ற எண்ணிக்கையில் புகையான்கள் இருக்கலாம்.

 கொன்றுண்ணி சிலந்தி இல்லாத நிலையில் ஒரு துாருக்கு 1 தத்துப்பூச்சி என்றும் சிலந்திகள் 1/குத்து என்ற அளவில் இருக்கும்போது துாருக்கு 2 தத்துப்பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் இருக்கலாம்.

தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.

தேவைக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்கவும்.

விளக்கு பொறி அமைத்து புகையானை கவர்ந்து அழிக்கலாம்.

வயலில் நன்றாக தண்ணீர் வடிந்த பிறகு மருந்து தெளிக்க வேண்டும்.

வேப்பெண்ணை 3 சதவிகிதம், 15 லிட்டர்/ஹெக்டேர்் (அ) இலுப்பை எண்ணை 6 சதவிகிதம் 30 லிட்டர்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் 25 கிலோ/ஹெக்டேர்.

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்.
பாசலான் 35 EC 1500 மி.லி/ஹெக்டேர்
கார்ப்ரைல் 10 D 25 கி.கி/ஹெக்டேர்
மீ்த்தைல்டேம்மட்டான் 25 EC 1500 மி.லி/ஹெக்டேர்
குளோரோபைரிபாஸ் 20 EC 1250 மி.லி/ஹெக்டேர்
அசிமேட் 75% SP 666-1000 கி /ஹெக்டேர்
அசார்டியாக்டின் 0.03% 1000மி.லி/ஹெக்டேர்
பியுப்ரோசன் 25% SC 800 மி.லி /ஹெக்டேர்
கார்போசல்பான் 25 EC 800-1000 மி.லி /ஹெக்டேர்
குளோரோடேரினிலிபுருள் 18.5% SC 150 கி/ஹெக்டேர்
குளோரோடேரினிலிபுருள் 0.4% G 10 கி/ஹெக்டேர்
டைகுளோரோவாஸ் 76% SC 470 மி.லி/ஹெக்டேர்
பேனோகார்ப் 50% EC 500-1500 மி.லி/ஹெக்டேர்
பைப்பரினில் 5 % SC 1000-1500 மி.லி/ஹெக்டேர்
பைப்பரினில் 0.3% GR 16670-25000 கி /ஹெக்டேர்
இமடாகுளோபிரிட் 70% WG 30-35 கி.கி /ஹெக்டேர்
இமடாகுளோபிரிட் 17.8 SL 100-125 மி.லி/ஹெக்டேர்
பாஸ்போமிடான் 875 மி.லி/ஹெக்டேர்
ட்ரைஅசோபாஸ் 40% EC 625-1250 மி.லி/ஹெக்டேர்
 

சனி, 13 ஜனவரி, 2024

காப்பி பயிரைத் தாக்கும் சதைக்கனி கொப்புளங்கள்




காப்பி பயிரைத் தாக்கும் 
சதைக்கனி கொப்புளங்கள்

அறிகுறிகள்

சதைக்கனியில் சிதைவு புள்ளிகள் தோன்றி பின்பு முழுவதாக பரவி முக்கியமான பகுதிகளை மூடி விடும். பழத் தோல்கள் சீக்கிரமாக சுருங்கி பின்னர் காயந்துவிடும்.
  
கட்டுப்பாடு

1 சதவீதம் போர்டியாக்ஸ் கலவையை ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாத கடைசியில் தெளித்து நிழற்கூடம் அமைக்கவும்.

வியாழன், 11 ஜனவரி, 2024

எலுமிச்சை பயிரைத் தாக்கும் எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி




எலுமிச்சை பயிரைத் தாக்கும் 
எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி 

தாக்குதலின் அறிகுறிகள்:

 புழுக்கள் வெளிர் இளம் இலைகளை விரும்பி உண்ணுகிறது.
இதனால் மரத்தின் அனைத்து பகுதியின் இலைகள் உதிர்வு ஏற்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறை:

கையினால புழுக்கள் தொற்றுள்ள பகுதியை பிடுங்கி அழிக்க வேண்டும்.
முதல் தோலுரிப்பு இடைப்பருவம் - 1 மிலி DDVP(Nuvan) தெளிக்க வேண்டும்.
ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிராமி வனிசன்ஸ் மற்றும் முட்டையின் மீது டெலினோமுஸ்ப், புழுக்களுக்கு ப்ராசிமிரியாஸ்ப் , கூட்டு புழுக்களுக்கு ப்டெரொல்ஸ் விடவேண்டும்.

செவ்வாய், 9 ஜனவரி, 2024

செவ்வந்தி பயிரைத் தாக்கும் கரு அசுவினி




செவ்வந்தி பயிரைத் தாக்கும்
கரு அசுவினி 

சேதத்தின் அறிகுறிகள்

இலையின் அடிப்பாகம் மற்றும் நுனித் தண்டுகளிலிருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.
செடியின் வளர்ச்சிக் குன்றிவிடும்.
இலைகள் சுருண்டுவிடும்.
இலைகள் வாடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

1 லிட்டர் தண்ணீரில் 15 கிராம் வெர்ட்டிசீலியம் ஸக்கானி கலந்து தெளிக்கவும்.
1 லிட்டர் தண்ணீரில் 1 மிலி மாலத்தியான் கலந்து தெளிக்கவும்.
 


திங்கள், 8 ஜனவரி, 2024

வெங்காயம் பயிரைத் தாக்கும் கரிப்பூட்டை நோய்




வெங்காயம் பயிரைத் தாக்கும் 
கரிப்பூட்டை நோய்
 
தாக்குதலின் அறிகுறிகள்

கருப்பு நிற கரிப்பூட்டை ஸ்போர்கள் இலைபரப்பின் மேலும் கீழும் காணப்படும்.
கருமை நிற பொடி போன்ற தூள் காணப்படும்.
    
கட்டுப்படுத்தும் முறை:

திரம் (அ) கேப்டான் 4 கிராம்/ கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
திரம் 0.25% கரைசலில் குமிழ்களை நனைத்துபின் நடவேண்டும்.

சனி, 6 ஜனவரி, 2024

தக்காளி பயிரைத் தாக்கும்கோடுள்ள மாவுப் பூச்சி



தக்காளி பயிரைத் தாக்கும்
கோடுள்ள மாவுப் பூச்சி 

தாக்குதலின் அறிகுறிகள்:

வெள்ளை நிற மாவு போன்ற பூச்சிகள் இலை, தன்டு மற்றும் குருத்துப்பகுதிகளில் காணப்படும்.
நாளடைவில் வளர்ச்சி குன்றி காய்ந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறை:

மீன் எண்ணெய் ரோசின் சோப் [FORS] ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம்/ லிட்டர் அல்லது வேப்பம் எண்ணெய் 0.5 சதம் உடன் டீப்பால் 1 மி.லி/ லிட்டர் கலந்து தெளிக்கவும்.
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
பாஸ்போமிடான் 40 Sl 2 மி.லி/லி
இமிடகுளோஃபிரிட் 80.5 SC 0.6 மி.லி/லிட்டர்
குளோர்பைரிஃபாஸ் 20EC 2 மி.லி/லிட்டர்
தைமீத்தாக்ஸ்ம் 25 WSG 0.6 மில்லிகிரம்/லிட்டர்
ஃபுரன்ப்பாஸ் 2 மி.லி/லிட்டர்
 

 

 


செவ்வாய், 2 ஜனவரி, 2024

உளுந்து பயிரைத் தாக்கும் ஆந்தராக்னோஸ் நோய்



உளுந்து பயிரைத் தாக்கும் ஆந்தராக்னோஸ் நோய்

அறிகுறிகள்

பயிரின் அனைத்து பகுதிகளையும், பயிரின் எந்த நிலையையும் இந்த நோய் தாக்கும்.

வட்ட வடிவில், கருப்பு நிற நீரில் அமிழ்ந்த புள்ளிகள் இலைகள் மற்றும் காய்களில் காணப்படும்.

 இந்த புள்ளிகளின் நடுவில் கருப்பு நிறமாகவும், ஓரங்களில் அடர் ஆரஞ்சு நிறத்துடனும் காணப்படும்.

தீவிர தாக்குதலின் போது, தாக்கப்பட்ட பகுதிகள் உதிர்ந்து விடும்.

விதை முளைக்க ஆரம்பித்தவுடன், நாற்றுக்கள் கருக ஆரம்பித்து விடும்.

பூஞ்சாண் விதைகள் மற்றும் பயிரின் குப்பைகளில் உயிர் வாழும்.

காற்று வழி பரவும் கொனிடியா மூலம் இந்த நோய் பரவும்.

குளிர் மற்றும் ஈரமான காலங்களில் நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்.

கட்டுப்பாடு

கார்பன்டசிம் 2 கிராம் / கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்தல்.

தாக்கப்பட்ட பயிரின் குப்பைகளை அகற்றி, அழித்தல்.

மான்கோசெப் 2 கிராம் / லிட்டர் (அ) கார்பன்டசிம் 0.5 கிராம் /லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.