புதன், 29 நவம்பர், 2023

தென்னை பயிரைத் தாக்கும்பைப் புழு



தென்னை பயிரைத் தாக்கும்
பைப் புழு

தாக்குதலின் அறிகுறிகள்:

ஒழுங்கற்ற, சிறிய அளவிலான துளைகள் ஓலைகளில் தென்படும். ஓலையின் உட்புறத்தில் பட்டு இழைகளால் பின்னப்பட்ட பை போன்ற அமைப்புகள் காணப்படும்.

மேலாண்மை:

இராசயன முறை:

தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும்,கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை 2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

இயந்திர முறை:

பொறி அமைத்தல்: விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம். ஒரு ஹெக்டருக்கு 5 பொறிகள் தேவைப்படும்.

ஞாயிறு, 19 நவம்பர், 2023

ரோஜா பயிரைத் தாக்கும் செதில்பூச்சி








ரோஜா பயிரைத் தாக்கும்
செதில்பூச்சி 

சேதத்தின் அறிகுறி:

தண்டை முழுவதுமாக செதில்பூச்சி சூழ்ந்து இருக்கும்.
தாவரத்தின் தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்துவிடும்.
தாக்கம் அதிகமாக இருந்தால் தாவரங்கள் காய்ந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறை:                 

தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி எரிக்க வேண்டும்.
மண்ணெண்ணையில் (அ) டீசலில் பஞ்சை நனைத்து செதில்பூச்சியை சுரண்டிவிட வேண்டும்.
மாலத்தியான் 2மி.லி / லிட்டர் கிளைகளை வெட்டிய பிறகு தெளிக்கவும்.
கார்போபியுரான் 5 கிராம் / தாவரம் மீன் எணஃணெய் ரோசின் சோப்பு 25 கிராம் / லிட்டரில் கரைத்து தெளிக்கவும்.

தென்னை பயிரைத் தாக்கும் கருந்தலைப்புழு (அ) பச்சையம் தின்னும் இலைப்புழு




தென்னை பயிரைத் தாக்கும்
கருந்தலைப்புழு (அ) பச்சையம் தின்னும் இலைப்புழு 

இப்புழுவானது கடலோரப் பகுதிகளில் குறிப்பாக இந்தியா போன்ற தீபகற்ப நாடுகளில் அதிக சேதம் ஏற்படுகிறது. வருடம் முழுவதும் தாக்குதல் இருந்தாலும் கோடைகாலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.

தாக்குதலின் அறிகுறிகள் :

இது அனைத்து வயதிலுள்ள மரங்களையும் தாக்குகிறது.
மரத்தின் அடிப்பகுதிகளில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும்.
ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி இப்புழுக்கள் தின்றுவிடும்.
அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் தென்படும்.

மேலாண்மை :

சாதாரண முறைகள்/உழவியல் முறைகள்:

தாக்கப்பட்ட ஓலைகளை வெட்டி அழித்து விட வேண்டும். குறிப்பாக கோடை காலம் துவங்கும் முன் செய்து விடுவது நல்லது.

இராசயன முறை:

தாக்குதல் ஒட்டுண்ணிகளால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும்போது, ​​ஓலையின் அடிப்பகுதிகளில் நன்கு படுமாறு டைக்குளோர்வாஸ் (100 EC) 0.02%, (அ) மாலத்தியான் 50 EC 0.05% (1 மி.லி/லி) (அ) குயினால்பாஸ் 0.05% (அ) பாஸலோன் 0.05% இவற்றில் ஏதேனும் ஒன்றைத் .

உயிரியல் முறை:

மெத்திலிட் மற்றும் பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் 1:8 என்ற விகிதத்தில் இலைகளின் அடிப்பாகத்தில் விடுவதால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
(அ) ​​3000 / ஹெ என்ற அளவில் விட வேண்டும். 
இந்த ஒட்டுண்ணிகளை கொண்டைப் பகுதியின் மேற்புறம் விட்டால் சிலந்தி போன்ற பூச்சி உண்ணிகள் அவசியம் ஏற்படும். 
எனவே இலையின் அடிப்பாகத்தில் இரசாயனத் தெளிப்பு செய்த பின் 3 வாரங்கள் கழித்து விட வேண்டும்.
யூலோபிட், பிராக்கிமேரியா, சாந்தோபிம்பிளா ஒட்டுண்ணிகள் கருந்தலைப் புழுவின் கூட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

மாதுளை பயிரைத் தாக்கும் இலைப்புள்ளி அல்லது கருகல் நோய்


மாதுளை பயிரைத் தாக்கும்
இலைப்புள்ளி அல்லது கருகல் நோய்

அறிகுறிகள் :

இலைகளின் மேல் சிறிய, வடிவம் இல்லாத, நீர் கோத்தது போன்ற புள்ளிகள் தோன்றும்.
தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும்.

கட்டுப்பாடு :

0.25%மேன்கோசெப்பை 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

முருங்கைக்காய் பயிரைத் தாக்கும் மொக்குப்புழு




முருங்கைக்காய் பயிரைத் தாக்கும்
 மொக்குப்புழு

தாக்குதலின் அறிகுறிகள் :

பூ மொக்ககளை புழுக்கள் துளையிட்டு சாப்பிடும், தாக்கப்பட்ட பூ மற்றும் மொக்குகள் உதிர்ந்து விடுகின்றன.

கட்டுப்படுத்தும் முறை :

உதிர்ந்த பூ மற்றும் மொக்குகளைப் பொறுக்கி அழித்தல்.
ஹெக்டேருக்கு 1 லிட்டர் மாலத்தியான் தெளிக்க வேண்டும்.

மக்காச்சோள பயிரைத் தாக்கும் அசுவினி




மக்காச்சோள பயிரைத் தாக்கும்
அசுவினி 

தாக்குதலின் அறிகுறிகள் :

இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
இலை குருத்துகளின் வட்டப் பகுதியை சுற்றிலும் கூட்டமாக காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

பூச்சி தாக்கிய செடியின் கீழ்பகுதியில் டெமட்டான் 25 EC 20 மி.லி மருந்தினை தெளிக்கலாம்.

சோள பயிரைத் தாக்கும் இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்




சோள பயிரைத் தாக்கும் 
இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்

தாக்குதலின் அறிகுறிகள் :

இளஞ்சிவப்பு புழு தண்டினை துளைத்து உள்ளே சென்று குருத்துக்களை தாக்குகிறது. தாக்கப்பட்ட இளம்பயிரில் குருத்து அழுகிவிடும்.

கட்டுப்படுத்தும் முறை :

ஹெக்டருக்கு பாசலோன் 35 % EC மருந்தை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்த இளஞ்சிகப்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
  

கம்பு பயிரைத் தாக்கும் நாவாய் பூச்சி




கம்பு பயிரைத் தாக்கும்
நாவாய் பூச்சி
 
தாக்குதலின் அறிகுறிகள் :

பதற்ற கதிர்கள் காணப்படும். தாக்கப்பட்ட கதிர்களில் கரும்புள்ளிகள் காணப்படுகின்றன.
இப்பூச்சிகளைத் தொட்டால் துர்நாற்றம் வீசும்.

கட்டுப்படுத்தும் முறை :

கீழ்வரும் ஏதாவது ஒரு மருந்தை தெளிக்கவும்.
கார்பரில் 10 டி
மாலத்தியான் 5 டி
கார்பரில் 50 WP 750 கிராம்

சர்க்கரைவள்ளி பயிரைத் தாக்கும் ஆமை வண்டுகள்




சர்க்கரைவள்ளி பயிரைத் தாக்கும்
ஆமை வண்டுகள்

தாக்குதலின் அறிகுறிகள் :

இளம் புழுக்கள் இலைகளை அரித்து சல்லடைபோல் செய்திருக்கும்.
வளர்ந்த புழுக்கள் மற்றும் வண்டுகள் இலைகளில் வட்டவடிவ துளையிட்டு சாப்பிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

வண்டின் புழுக்கள் சேகரித்து அழிக்கவும்.
ஏக்கருக்கு மாலத்தியான் 200மி.லி தெளிக்கவும்.
பூச்சி தாக்காத கிழங்குகளை உபயோகப்படுத்தவேண்டும்.
மஞ்சள் ஒட்டும் அட்டை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.
ஒரு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ 21 நாட்களுக்கு ஒரு முறை, கிழங்குகள் எடுக்க ஆரம்பித்ததிலிருந்து தெளிக்கவேண்டும்.

மரவள்ளி பயிரைத் தாக்கும் மரவள்ளி மாவுப்பூச்சி




மரவள்ளி பயிரைத் தாக்கும்
மரவள்ளி மாவுப்பூச்சி
 
தாக்குதலின் அறிகுறிகள் :

மரவள்ளியின் இளம்தளிர், தண்டு மற்ற இலையின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். 
சாற்றை உறிஞ்சும்பொழுது மரவள்ளியில் நச்சுப்பொருளை உட்செல்லும்.
நுணிக்குருத்துகள் உருமாறியும், வளர்ச்சிக்குன்றியும் காணப்படும்.
செடியின் நுணியிலுள்ள இலைகள் ஒன்றாக இணைந்து “முடிக்கொத்தாக” தோற்றமளிக்கும்.
இடைகணுக்குள் நீளம் குறைந்துவிடும். 
தண்டுகள் சிதைவடைந்து காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

மாலத்தியான் அல்லது ஃபெனிட்ரோதியான் @1மி.லி/லிட்டர் தெளிக்கவும்.

மரவள்ளி பயிரைத் தாக்கும் மரவள்ளி செதில் பூச்சி




மரவள்ளி பயிரைத் தாக்கும்
மரவள்ளி செதில் பூச்சி

தாக்குதலின் அறிகுறிகள்:

செடியின் தண்டு பகுதிகளை தாக்கும்.
தாக்கப்பட்ட இலைகள் நிறம்மாறியும், உலர்ந்தும் விடும்.
செடியின் வளர்ச்சி குன்றிவிடும்.

கட்டுப்படுத்தும் முறை:

பூச்சிகளற்ற (செதில்பூச்சிகள்) கரணைகளை நடவு செய்ய வேண்டும்.
தாக்கப்பட்ட தண்டினை அழிக்கவும்.
வயலில் காக்சோநிலிட் வகை பொறி வண்டுகளின் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும்.
மீதைல் டெமிட்டான் 0.25 சதம் தெளிக்கவும்.

மரவள்ளி பயிரைத் தாக்கும்வெள்ளை ஈ




மரவள்ளி பயிரைத் தாக்கும்
வெள்ளை ஈ

தாக்குதலின் அறிகுறிகள்:

முதலில் வெண்புள்ளிகள் தோன்றி பிறகு அவை ஒன்றாக இணைந்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
கடுமையாக தாக்கப்பட்ட செடிகளை முதிரா நிலையில் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிடும்.
கரும்புகை பூசணத்தை ஏற்படுத்தும்.
நரம்பு வெளத்தல் மஞ்சள் நரம்பு தேமல் நோயை பரப்புகின்றது.
மரவள்ளிதேமல் நோயை பரப்பும்.

கட்டுப்படுத்தும் முறை: 

துத்தி (அபுட்லான் இண்டிகம்) செடிகளை வயலில் இருந்து அகற்ற வேண்டும்.
மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கொண்டு வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்.
பின்வரும் பூச்சிக்கொல்லிகள் ஏதேனும் ஒன்றை தெளிவுபடுத்தவும்.
ஃபாசலோன் 35 EC @2.5 லிட்டர்/ஹெக்டேர்
குவினால்பாஸ் @2.0 லிட்டர்/ஹெக்டேர்
ட்ரைஅசோஃபாஸ் @2.0 லிட்டர்/ஹெக்டேர்


மரவள்ளி பயிரைத் தாக்கும்சுருள் வடிவ வெள்ளை ஈ




மரவள்ளி பயிரைத் தாக்கும்
சுருள் வடிவ வெள்ளை ஈ

தாக்குதலின் அறிகுறிகள்:

இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
செடிகளில் கீழ்பாகத்தில் உள்ள இலைகளில் கரும்புகைப்பூசணம் தோற்றுவிக்கும்.
தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை: 

துத்தி (அபுட்லான் இண்டிகம்) செடிகளை வயலில் இருந்து அகற்ற வேண்டும்.
மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கொண்டு வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்.

கீரை பயிரைத் தாக்கும்தண்டுக் கூண் வண்டு




கீரை பயிரைத் தாக்கும்
தண்டுக் கூண் வண்டு 

தாக்குதலின் அறிகுறிகள்:

தண்டின் நடுப்பகுதியில் ஒழுங்கற்ற குறுக்குநெடுக்கமான துளைகளில் பூச்சியின் கழிவுப்பொருள்கள் காணப்படுகின்றன.
தண்டுகளில் வீக்கங்களும், நீளவாக்கில் வெடிப்புகளும் காணப்படுகின்றன.
புதிய வேர்கள் மற்றும் இலைகளின் வளர்ச்சி தடைபடும்.

கட்டுப்படுத்தும் முறை:

காட்டுவகை தண்டுக்கீரை உணவுப்பயிர்களை,கீரைவகைப்பயிர்களுக்கு அருகாமையில் இருந்தால் சேகரித்து அழிக்கவும்.
தாக்கப்பட்ட செடிகளை வண்டினப்புழுக்கள் மற்றும் வண்டுகளுடன் சேகரித்து அழிக்கவும்.
இலைகள் அறுவடைக்குப்பிறகு மாலத்தியான் 50 EC 2மி.லி/லிட்டர் தெளிக்கலாம்.

கீரை பயிரைத் தாக்கும் இலை பிணைப்பான்




கீரை பயிரைத் தாக்கும்
இலைபிணைப்பான்

தாக்குதலின் அறிகுறிகள்:

நூலாம்படையால் இலைகளை பிணைத்து அதனுள் இருந்து பச்சையத்தை சுரண்டி தின்று சேதமுண்டாக்கின்றன.

கட்டுப்படுத்தும் முறை:

தாக்கப்பட்ட செடிகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்.
ஹைக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி அமைத்து அந்தப்பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
மாலத்தியான் 50 EC 1மி.லி / லிட்டர் தெளிக்கவும்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர
ஜீ டிவி ஆப்ஸ் 

subscribe: https://youtube.com/@premdhivakarvelanmai?si=r9cnKefNDmHjB1O2

Website: https://premdhivakarvelanmai.blogspot.com

Like us on: https://www.facebook.com/profile.php?id=61551917497933&mibextid=ZbWKwL

Follow us on: https://www.twitter.com/premdhivak88439

Follow us on: https://www.Instagram.com/premdhivakarvelanmai

கீரை பயிரைத் தாக்கும்இலைப்புழு




கீரை பயிரைத் தாக்கும்
இலைப்புழு

தாக்குதலின் அறிகுறிகள்:

இலைகளைப் பிணைத்து அதற்குள் இருந்துகொண்டு புழுவானது சேதத்தை ஏற்படுத்தும்.
இலைப்பச்சையத்தை சுரண்டித் தின்பதால் இலைகள் வாடிவிடுகின்றன.

கட்டுப்படுத்தும் முறை:

தாக்கப்பட்ட செடிகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்.
ஹைக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி அமைத்து அந்தப்பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
மாலத்தியான் 50 EC 1மி.லி/ லிட்டர் தெளிக்கவும்.