ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

தென்னை பயிரைத் தாக்கும் தென்னை ஸ்கிப்பர் வண்ணத்துப்பூச்சி






தென்னை பயிரைத் தாக்கும் 
தென்னை ஸ்கிப்பர்
வண்ணத்துப்பூச்சி

இது குருத்துவண்டு, கருவண்டு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும்.

தாக்குதலின் அறிகுறிகள்:

தென்னை ஓலையின் ஒரு பகுதி மட்டும் கத்தரித்ததுபோல் வளைந்து, நெளிந்து காணப்படும்.
இவ்வாறு சுருண்ட இலைகள் வறண்டு காய்ந்திருக்கும்.

மேலாண்மை:

இராசயன முறை:

தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும், கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை 2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

திங்கள், 5 பிப்ரவரி, 2024

ரோஜா பயிரைத் தாக்கும் ரோஜா அசுவினி




ரோஜா பயிரைத் தாக்கும் ரோஜா அசுவினி

சேதத்தின் அறிகுறி:

குஞ்சுகளும், பூச்சிகளும் இளம் தண்டுகளில், பொருட்களில் மற்றும் மலர்களில் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சும்.

இளம் குருத்துக்கள் உதிர்ந்துவிடும், மலர்கள் சாயமற்று காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

மிதைல் டெமட்டான் 1மி.லி / லிட்டர் (அ) மிதைல் பாரத்தியான் 2மி.லி / லிட்டர் (அ) வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம் தெளிக்கவும்.

சனி, 3 பிப்ரவரி, 2024

நெல் பயிரைத் தாக்கும் வெட்டுக்கிளி






நெல் பயிரைத் தாக்கும் வெட்டுக்கிளி

தாக்குதலின் அறிகுறிகள்:

நாற்றுக்கள் மற்றும் இலைப்பரப்பை ஒழுங்கற்ற முறையில் உண்ணும்.
கதிர் பருவத்தில் தண்டுகளை வெட்டி உண்ணும்.
இலை நரம்பை தவிர, இலை முழுவதையும் உண்டுவிடும்.
இலை பரப்பின் மேல் இளம்பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.