வெள்ளி, 28 ஜூன், 2024

தொடர் மழை எதிரொலி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

தொடர் மழை எதிரொலி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி
 
கன்னியாகுமரி: தொடர் மழை காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூ.150 விற்ற சம்பங்கி ரூ.80க்கும், ரூ.120 விற்ற மஞ்சள் கேந்தி ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ரூ.200க்கு விற்ற அரளி ரூ.70க்கும், ரூ.90க்கு விற்ற வாடாமல்லி ரூ.50க்கும், ரூ.125க்கு விற்ற சிகப்பு கேந்தி ரூ.85க்கும், ஒரு கிலோ ரூ.1500-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.300க்கும், ரூ.1000-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ரூ.400க்கும் விற்பனையாகிறது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram

இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை

இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டு நாளாக குறைந்த தங்கத்தின் விலையானது இன்று சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (28-06-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ரூ.6666-க்கு விற்பனை, சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.53,328-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.94.50க்கும், கிலோ வெள்ளி ரூ.94,500க்கும் விற்பனை ஆகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (27-06-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,625க்கும் விற்பனையானது. அதே நேரம், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.94.50க்கும், கிலோ ரூ.94,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram

செவ்வாய், 18 ஜூன், 2024

விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி!

விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி!

வாரணாசியில் நடைபெற்ற பிஎம் கிஷான் சம்மன் சமேளன் திட்டத்தில் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு ஆதரவு தொகையாக ரூ. 20,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளார்.

வாரணாசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றதை அடுத்து முதல்முறையாக அங்கு சென்றார்.

பிரதமராக பதவியேற்றப் பிறகு 17 ஆவது தவணை பிஎம் கிஷான் சம்மன் நிதியை வெளியிடுவதற்கான கோப்பில் முதலாவதாக கையெழுத்திட்டார்.

இத்திட்டத்தின் கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தவணையை நேரடிமுறை பணப் பரிமாற்றம் மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.

இந்த விழாவில் பிரதமர் மோடியை உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram


ஞாயிறு, 16 ஜூன், 2024

மல்லிகை பூ ரூ.2000 விற்பனை


மல்லிகைப் பூவின் விலை உயர்வு

சங்கரன்கோவிலில் மல்லிகைப் பூவின் விலை உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் நாள்தோறும் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதை தொடர்ந்து முகூர்த்த நாள் வந்ததால் மல்லிகை பூவின் விலை ஏற்றம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கரன்கோவில் பூச்சந்தையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ 2000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram