வெள்ளி, 31 மே, 2024

கோயம்புத்தூர்மனித வாழ்வுக்கு தேவையான பணியில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் புகழாரம்!

கோயம்புத்தூர்
மனித வாழ்வுக்கு தேவையான பணியில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் புகழாரம்!

ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பாக, உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் இன்று (31-05-2024) மரம் நடும் விழா நடைப்பெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து “காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு அரசாங்கம் ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்த ஆண்டு 5,40,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிறுத்த ஷெட்டில் நடைப்பெற்றது. நகர மன்றத் தலைவர் கவிதாபாண்டியன் அவர்களின் முன்னிலையில் நடைப்பெற்ற இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பேசுகையில் “திருவாரூர் மாவட்டத்தில் காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 5 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை பல்வேறு இடங்களில் நட்டு இந்தப் பணியை மிகச்சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் பல்வேறு விவசாயிகளை சந்தித்தும் இந்த மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறார்கள். இவர்கள் ஏதோ ஒரு பேருக்காக மரக் கன்றுகள் வழங்கும் இயக்கமாக இல்லை, நான் நேரடியாக கவனித்த போது எந்த விவசாயிக்கு மரக்கன்றுகள் தேவையோ, அந்த விவசாயிகளிடம் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்து, அவர்களின் மண் வளம் தண்ணீர்த் தேவை இதை முழுமையாக அறிந்து கன்றுகள் கொடுக்கப்படுகின்றன.

மனித வாழ்வுக்கு தேவையான இந்த மரக்கன்றுகள் நடும் பணியில் ஈஷா இயக்கம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் இதில் பங்கு எடுத்து இருக்கிறார்கள். அதுவும் நம்முடைய திருவாரூர் மாவட்டத்திலும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களிலும் இந்த காவேரி கூக்குரல் இயக்கம் மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களுக்கு முழுவதுமாக ஆதரவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் நாங்கள் பங்கெடுப்பதை பெருமையாக கருதுகிறோம்” எனக் கூறினார்

ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மைகளை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடரYouTube Facebook Twitter Instagram


தேனிமஞ்சளாறு அணை நீா்மட்டம் உயா்வு -பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி
மஞ்சளாறு அணை நீா்மட்டம் உயா்வு -பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டம், மஞ்சளாறு அணை நீா்மட்டம் 51 அடியாக (அணையின் மொத்த உயரம் 57 அடி) உயா்ந்ததால், கரையோரப் பகுதி பொதுமக்களுக்கு வியாழக்கிழமை முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கொடைக்கானல் வனப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் சீராக உயா்ந்து 51 அடியை எட்டியது. இதையடுத்து, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தேவதானப்பட்டி, கெங்குவாா்பட்டி, சிவஞானபுரம், வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் மஞ்சளாறு கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அணை நீா்மட்டம் 53 அடியை எட்டியதும் 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியாக உயா்ந்ததும் 3-ஆம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்படும். பின்னா், அணைக்கு வரும் உபரிநீா் மஞ்சளாறில் வெளியேற்றப்படும். மஞ்சளாறு, அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளின் கரையோரங்களில் வசிப்பவா்கள் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது என அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.

அணை நிலவரம்: மஞ்சாறு அணை நீா்மட்டம் 51 அடி. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 11 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 356.17 மில்லியன் கன அடி.

கண்மாய் நீா்மட்டம் உயா்வு: போடி பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயில் நிலவி வந்த நிலையில், இந்தக் கண்மாய் வடு காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு போடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இந்த ஆற்றின் முக்கிய கிளை வாய்க்காலான ராஜவாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதையடுத்து, போடி பகுதியில் உள்ள சங்கரப்பன் கண்மாய், மீனாட்சிபுரம் பெரிய கண்மாய் ஆகியவற்றுக்கு நீா்வரத்து அதிகரித்தது. பரப்பளவில் பெரியதான இந்தக் கண்மாயின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

இந்தக் கண்மாய் நிரம்பி வருவதன் மூலம் விசுவாசபுரம், பத்ரகாளிபுரம், அம்மாபட்டி, சுந்தர்ராஜபுரம், துரைராஜபுரம் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram


புதன், 29 மே, 2024

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 3 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 3 வரை மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே 29) முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் (மே 29, 30) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31.05.2024 மற்றும் 01.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

02.06.2024 மற்றும் 03.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram

எலுமிச்சை விலை சரிவு!


எலுமிச்சை விலை சரிவு!

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் எலுமிச்சை விலை செவ்வாய்க்கிழமை பாதியாகக் குறைந்தது.

ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள வடகாடு, பாச்சலூா், பெத்தேல்புரம், சிறுவாட்டுக்காடு, கே.சி.பட்டி, பெரியூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் விளையக் கூடிய எலுமிச்சையை விவசாயிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் குறைந்தாலும், கேரளத்தில் மழை பெய்யத் தொடங்கியதால், கேரள வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய வரவில்லை.

இதேபோல, எலுமிச்சையின் தேவையும் குறைந்து விட்டதன் காரணமாக ரூ.180-க்கு விற்ற ஒரு கிலோ எலுமிச்சை திடீரென விலை குறைந்து ரூ.80 முதல் 90 வரை விற்பனையானது.

இதேபோல, ரூ.24-க்கு விற்ற ஒரு கிலோ பீட்ரூட் விலை குறைந்து 17-க்கு விற்பனையானது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடரYouTube Facebook Twitter Instagram