யாரும் நகை கடை பக்கம் போயிடாதீங்க.! ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120க்கு விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.இதனிடையே அக்ஷய திருதியை வருகிற 10ம் தேதி வருகிறது. அன்றைய தினம் தங்கம் வாங்கினால் வருடம் முழுவதும் தங்கம் வாங்குவார்கள் என கூறப்படுகிறது. இதனால் பெண்கள் அக்ஷய திருதியை நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,640-க்கும் சவரன் ரூ. 53,120-க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-க்கும் பார் வெள்ளி ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக