சனி, 11 மே, 2024

தர்மபுரி ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு


தர்மபுரி
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்:காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இன்றி வறட்சி நிலவுவதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் 2 மாதமாக நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக சரிந்துள்ளது. ஐவர்பாணி, அதன் கிளை ஆறுகள், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் வறண்டன.

சில நாட்களாக ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 5:00 மணிக்கு 800 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக