சனி, 15 ஜூன், 2024

தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது

  
தமிழ்நாடு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது தங்க நகைகள் வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,705-க்கும், பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.53,640-க்கும் விற்பனையாகி வருகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.95.60-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.600 உயா்ந்து ரூ. 95,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக