செவ்வாய், 23 ஜூலை, 2024

தம்மம்பட்டியில் கத்தரிக்காய் கிலோ ரூ. 100!

தம்மம்பட்டியில் கத்தரிக்காய் கிலோ ரூ. 100!

தம்மம்பட்டி: தம்மம்பட்டி மண்டிகளுக்கு கத்தரிக்காய் வரத்து குறைந்ததால் கத்தரிக்காய் கிலோ ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்டது.

தம்மம்பட்டி பகுதியிலுள்ள காய்கறி மண்டிகளுக்கு கத்தரிக்காய் கடந்த வாரம் வரை 1,750 கிலோ முதல் 2,400 கிலோ வரை வரத்து இருந்ததால் அதன் விலை கிலோ ரூ. 40 க்கும், சில்லறை விற்பனையில் ரூ. 70-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது கத்தரிக்காய்களில் பூச்சித் தாக்குதலையடுத்து, அதன் வரத்து வெகுவாகக் குறைந்து வருகிறது. தம்மம்பட்டி மண்டிகளுக்கு திங்கள்கிழமை மொத்தம் 350 கிலோ மட்டும் கத்தரிக்காய் வரத்து இருந்தது. இதனையடுத்து மண்டிகளில் கிலோ ரூ. 90 முதல் ரூ. 100 வரை ஏலம் போனது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக