திங்கள், 8 ஜூலை, 2024

சென்னை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு 

சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் 54 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் 6 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து 99 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக