கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 50,500 கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 50,500 கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 45,000 தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நுகு அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வயநாடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக