உணவு, உரம், எரிபொருள் மானியம் 7.8 சதவீதம் குறைப்பு
2024-25ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில், “நிதி விவேகத்தை குறிக்கும் ஒரு நடவடிக்கையாக உணவு, உரம், எரிபொருளுக்கான மானிய செலவை 7.8 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த மானிய ஒதுக்கீடு ரூ.3,81,175 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டு ரூ.4,13,466 கோடியாக இருந்தது. இந்த மானிய குறைப்பு பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளுடன் ஒத்து போகிறது.உணவு மானியம் ரூ.2,05,250 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உர மானியம் குறிப்பிடத்தக்க குறைப்பை கொண்டுள்ளது. முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளான ரூ.1,88,894 கோடிக்கு எதிராக 2024-25ம் நிதியாண்டில் ரூ.1,64,000 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய மானியங்கள், சமையல் எரிவாயு(எல்பிஜிக்கான) மானியம் 2023-24 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.12,240 கோடியாக இருந்தது. இது ரூ.11,925 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக