திங்கள், 22 ஜூலை, 2024

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 65 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 2640 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 124 மில்லியன் கனஅடியாக உள்ளது. வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 314 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 40.15% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 41.07%, புழல் – 80%, பூண்டி – 4.52%, சோழவரம் – 11.47%, கண்ணன்கோட்டை – 62.8% நீர் இருப்பு உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக