புதன், 24 ஜூலை, 2024

திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

திருப்பூர்: திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளில் மொத்தம் 21,867 ஏக்கர் நிலங்களுக்கு 25.07.2024 முதல் 08.08.2024 வரை விநாடிக்கு 1000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக 1296.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கர் புதிய பாசன நிலங்களுக்கு 25.07.2024 முதல் 08.08.2024 வரை 15 நாட்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக விநாடிக்கு 440.00 கன அடி வீதம் 570.24 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்களுக்கு 1866.24 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 25.07.2024 முதல் 08.08.2024 வரை 15 நாட்களுக்கு நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு சிறப்பு நனைப்புக்கும் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும், அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக