ஓமலூர் அருகே சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்: விவசாயிகள் வேதனை
ஓமலூர்: ஓமலூர் அருகே நேற்று முன்தினம் பெய்த மழையின் போது வீசிய சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் சாந்து சேதமானதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலுர் வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையை தொடர்ந்து, விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. நெல், வாழை, மஞ்சள், கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.கடந்தாண்டு பெய்த மழையால் கிணறுகளில் தண்ணீர் உள்ளதால், நீராதாரம் உள்ள பகுதிகளில் விவசாயிகள் வாழையை அதிகமாக சாகுபடி செய்துள்ளனர். கோட்டமேட்டுப்பட்டி கிராமத்தில் மொந்தன், பூவன், ரஷ்தாளி, பச்சை வாழை, செவ்வாழை உள்ளிட்ட ரகங்களை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இந்த வாழை மரங்களில், பூ மற்றும் வாழை தார் பிடித்துள்ளது. இந்நிலையில் ஓமலூர் வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் போது பலத்த காற்று வீசியது.இந்த காற்றுக்கு கோட்டமேட்டுப்பட்டி கிராமம் பருப்பு மில் பகுதியை சேர்ந்த விவசாயி சின்னசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த, 250 வாழை மரங்கள் முழுமையாக உடைந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதில், வாழை பூ மற்றும் வாழை பிஞ்சு, வாழை காய்களுடன் கூடிய 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாந்தது. இதேபோல மேலும், சில இடங்களில் வாழை குழையுடன் மரங்கள் சாய்ந்து, வாழை விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால், வாழை பயிரிட்ட விவசாயிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் வேதனையில் உள்ளனர். ஒரு ஏக்கருக்கு சுமார் ₹1.5 லட்சம் வரை செலவு செய்து பயிரிட்டுள்ளனர். அனைத்தும், சாய்ந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்களுக்கு, தமிழக அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தோட்டங்களை ஆய்வு செய்து இழப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.The post ஓமலூர் அருகே சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.
Tags : Omalur ,Salem district ,Dinakaran ,
More தமிழகம்
image
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட்
12:57 PM 02 SEP, 2024image
மாநில பாடத்திட்டம்தான் சிறந்தது என ஆளுநருக்கு நிரூபிக்கத் தயார் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சவால்
12:52 PM 02 SEP, 2024image
தமிழகத்தில் நடப்பாண்டு இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
12:45 PM 02 SEP, 2024image
சுங்கச்சாவடி கட்டண உயர்வு எதிரொலி: ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக பேருந்து உரிமையார்கள் அறிவிப்பு!
12:41 PM 02 SEP, 2024image
என் படைப்பையும் உழைப்பையும் கொண்டாடி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி இயக்குநர் மாரி செல்வராஜ்..!!
12:20 PM 02 SEP, 2024image
மாநில பாடத்திட்டம் குறித்து விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
12:12 PM 02 SEP, 2024image
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் மேட்டூரில் புனல் மின் நிலையத்தின் முதல்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ நிறுவனம்
12:03 PM 02 SEP, 2024image
2011-ல் தமிழ்நாட்டில் அத்வானி ரதயாத்திரை சென்றபோது பைப் குண்டு கண்டறியப்பட்ட வழக்கில் பாதுகாப்பு கோரி மனு
11:59 AM 02 SEP, 2024image
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள் தூர்வாரும் பணி
11:51 AM 02 SEP, 2024image
தமிழ்நாட்டில் நடப்பாண்டு இதுவரை 11,538 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
11:49 AM 02 SEP, 2024
Copyright © Dinakaran.
All rights reserved. Powered by SORTD
NEW
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக