அதன் படி பவுனுக்கு ரூ.1100 உயர்ந்தால் ரூ.800 குறைவதும், ரூ.800 உயர்ந்தால் ரூ.400 குறைவதுமாக தங்கம் விலை மாறி, மாறி காணப்பட்டது. அதன்படி இந்த தாண்டு தொடங்கியதில் இருந்து ரூ.62 ஆயிரத்தில் இருந்து ரூ.64 ஆயிரமாக தங்கம் விலை அதிகரித்தது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (பிப்.17ம்தேதி) தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,940க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,970க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.63,760க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,035க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.64,240க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.64,560-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.8,070க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக