செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

முட்டை விலை 440 காசாக குறைப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த ஒரு வாரமாக 465 காசாக இருந்து வந்தது. இந்நிலையில், என்இசிசி நாமக்கல் மண்டல சேர்மன் சிங்கராஜ், முட்டை விலையில் நேற்று 25 காசுகள் குறைத்து விலை நிர்ணயம் செய்தார். இதையடுத்து, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை 25 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக