கொட்டை முந்திரி விவசாயத்தை பொருத்தவரை மழை இல்லாவிட்டாலும், ஆரம்ப கால பராமரிப்பு என்பது மிக முக்கியம். இந்தாண்டு முன் கூட்டியே வடகிழக்கு பருவமழை, கோடைமழை, தென்மேற்கு பருவமழை, தொடங்கினால் அனைத்து விவசாயிகளும் வளம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றத்துடனே உள்ளனர். மேலும், பருவமழை தொடர்ந்து பெய்யும்போது கொட்டை முந்திரி உள்ளிட்ட விவசாயம் வறண்ட நிலங்களில் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனை ஊக்குவிக்க வேளாண்மைதுறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வியாழன், 20 பிப்ரவரி, 2025
தேவாரம் பகுதியில் குறைந்து வருகிறது முந்திரி விவசாய பரப்பு: ஊக்குவிக்க விவசாயிகள் கோரிக்கை
தேவாரம்: தேவாரம் பகுதியில், கொட்டை முந்திரி விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் குறைந்துள்ளது. உத்தமபாளையம் வட்டாரத்தில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் 3ஆயிரம் ஏக்கர் பரப்பில் கொட்டை முந்திரி விவசாயம் நடந்தன. சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமாக கோம்பை, பண்ணைப்புரம் பகுதியில் நடந்தது. இடைக்காலங்களில் குறிப்பாக கடந்த 15 வருடம் முன்பு மழை இல்லாத நிலையில் இதன் விவசாயம் சுருங்கியது. காரணம் அனைத்து கண்மாய்கள், குளங்களிலும் மழை இல்லாத நிலையில் வறண்டன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக