புதன், 19 பிப்ரவரி, 2025

கல்வராயன்மலையில் அதிகளவில் தக்காளி, பீன்ஸ் சாகுபடி

கல்வராயன்மலை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் விவசாய பகுதியாக உள்ளது கல்வராயன் மலை. இங்குள்ள வெள்ளிமலை, சேராப்பட்டு, மணியார் பாளையம், மேல்பாச்சேரி,சின்ன திருப்பதி,தொரங்கூர், தாழ்பாச்சேரி, முண்டியூர், தொடிப்பட்டு உள்ளிட்ட 100 மேற்பட்ட கிராமங்களில் தக்காளி மற்றும் பீன்ஸ் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த பராமரிப்பு செலவில் அதிக லாபம் தரக்கூடிய பீன்ஸ் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி, பீன்ஸ் என்பது 3 மாத கால பயிராகும். வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
பராமரிப்பு செலவு மிக குறைவாக உள்ளது. அதேபோல் மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு தோட்டக்கலை துறை மூலம் மானியமும், சொட்டுநீர் பாசனம் மூலம் 100% மானியம் அரசு வழங்குகிறது. அதனை பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும். இதனால் கல்வராயன்மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி, பீன்ஸ்,மரவள்ளி கிழங்குகளை அதிகளவில் விரும்பி பயிரிட்டு பயன்பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக