சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை - கேரள அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், இருமாநில எல்லைப் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இடுக்கி மாவட்டம் வட்டவாடா பகுதியில் சிலந்தி ஆற்றைத் தடுத்து கேரளா அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீர்வரத்து கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரள அரசின் செயலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், தமிர்நாடு - கேரளா எல்லை பகுதியான சின்னாறு சோதனைச் சாவடியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெண்கள், ஆண்கள் என 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கேரள அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேரள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக