புதன், 17 ஜூலை, 2024

மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.600-ஆக உயர்வு

மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.600-ஆக உயர்வு

மதுரை: ஆடி மாத பிறப்பை ஒட்டி மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.600-ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ரூ.400-க்கு விற்ற மல்லிகை பூ விலை ரூ.600-ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.500-க்கும், முல்லைப்பூ ரூ.300-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ரோஸ் ரூ.120-க்கும், அரளி ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனையாகி வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக