ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

அதிக மகசூல் தரும் 109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார் பிரதமர்

அதிக மகசூல் தரும் 109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார் பிரதமர்

புதுடில்லி: அதிக மகசூல் தரக்கூடிய 109 புதிய பயிர் ரகங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.

டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் 34 களப் பயிர்கள் மற்றும் 27 தோட்டப் பயிர்கள் உள்பட 109 ரகங்களை பிரதமர் அறிமுகம் செய்து, விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார். விளைநிலங்களை பார்வையிட்டார்.

இன்று அறிமுகம் செய்யப்பட்ட 109 ரகங்களில் களப் பயிர்களில் சிறுதானியங்கள், தீவனப்பயிர்கள், எண்ணெய்வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும், தோட்டக்கலைப் பயிர்களில் பழங்கள், காய்கறிகள், சணல், மூலிகைப் பயிர்கள் உள்ளிட்டவை அடங்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக