வியாழன், 20 பிப்ரவரி, 2025

ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் பால்சம் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா தொட்டபெட்டா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், முதல் சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பாத்திகள் தயார் செய்யப்பட்ட நிலையில், மலர் நாற்றுக்கள் நடவு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பூங்கா மலர்களின்றி காட்சி அளிக்கிறது. அதே சமயம் கண்ணாடி மாளிகையில் பால்சம் மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், ரென்குலாஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் தொட்டிகளை கொண்டு மலர்அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக