வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
தங்கம் விலை மேலும் உயர்வு ஒரு பவுன் ரூ.64,560 விற்பனை
சென்னை: தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.65க்கு உயர்ந்து கிராம் ரூ.8,035க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து பவுன் ரூ.64 ஆயிரத்து 280கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை 2வது முறையாக ரூ.64 ஆயிரத்தை தாண்டியது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்றும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து கிராம் ரூ.8,070க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, பவுன் ரூ.64,560க்கும் விற்றது. இந்த விலை என்பது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு ஒரு கிராம் ரூ.109க்கு விற்பனையானது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக