ஓமலூர் : ஓமலூர் சுற்று வட்டாரத்தில் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் பகலில் வெயில் சுட்டெரிப்பதால் கொத்தமலை விளைச்சல் அதிகரித்துள்ளது.
விவசாயிகள் கொத்தமல்லி அறுவடையை தொடங்கி உள்ளனர்.ஓமலூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொத்தமல்லி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
சேலம், ஓமலூர் பகுதியில் மார்க்கெட், உழவர் சந்தை மற்றும் வாரச்சந்தைக்கு கொத்தமல்லி வரத்து அதிகரித்துள்ளதால், விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30 வரை விற்றது.
ஆனால் தற்போது ரூ.5 முதல் ரூ.8 வரையே சந்தைகளில் விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கும் போது கட்டு ஒன்றை ரூ.3க்கு கொள்முதல் செய்கின்றனர். கொத்தமல்லி சாகுபடி, பறிப்பு கூலிக்கு கூட விலை கட்டுபடியாகாததால் விவசாயிகள் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேசமயம் கோடை வெயிலால் குளிர்ச்சியை தரும் கொத்தமல்லி விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக