வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று மாடுகள் வரத்து அதிகரித்ததால் விற்பனை அமோகமாக நடந்தது. இதனால் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக கால்நடை வியாபாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் அடுத்த பொய்கை கால்நடை சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், காளைகள், எருமைகள், கோழிகள், ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று மாட்டுச்சந்தை கூடியது. இதில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் வியாபாரம் களைக்கட்டியது. விற்பனை அமோகமாக நடந்ததால் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் ‘வேலூர் மாவட்டத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வரும் காலங்களில் தீவனம் தட்டுப்பாடு ஏற்படும். அப்போது மாடுகள் விற்பனை செய்தால் குறைந்த விலைக்கு தான் போகும். அதனால் முன்கூட்டிய கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனைக்கு விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள். கடந்த சில வாரங்களாக வரத்து பாதியாக குறைந்து.
பெரிய அளவில் விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்ய விரும்பவில்லை. இதனால் வரத்து குறைந்துள்ளது. மாடுகள் வாங்க வரும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு மாடுகளை கேட்பதால் விற்பனைக்கு கொண்டு வரும் கால்நடைகளையும் விற்பனை செய்யாமல் விவசாயிகள் திரும்பி கொண்டு சென்றனர்.
ஆனால் தற்போது விற்பனை அமோகமாக நடந்தது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் போட்டி போட்டு கொண்டு கால்நடை வாங்குகிறார்கள். இனி வரும் வாரங்களில் மாடுகள் வரத்து அதிகரிக்கும்’ என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக