கருந்தலைப்புழு (அ) பச்சையம் தின்னும் இலைப்புழு
இப்புழுவானது கடலோரப் பகுதிகளில் குறிப்பாக இந்தியா போன்ற தீபகற்ப நாடுகளில் அதிக சேதம் ஏற்படுகிறது. வருடம் முழுவதும் தாக்குதல் இருந்தாலும் கோடைகாலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.
தாக்குதலின் அறிகுறிகள் :
இது அனைத்து வயதிலுள்ள மரங்களையும் தாக்குகிறது.
மரத்தின் அடிப்பகுதிகளில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும்.
ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி இப்புழுக்கள் தின்றுவிடும்.
அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் தென்படும்.
மேலாண்மை :
சாதாரண முறைகள்/உழவியல் முறைகள்:
தாக்கப்பட்ட ஓலைகளை வெட்டி அழித்து விட வேண்டும். குறிப்பாக கோடை காலம் துவங்கும் முன் செய்து விடுவது நல்லது.
இராசயன முறை:
தாக்குதல் ஒட்டுண்ணிகளால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும்போது, ஓலையின் அடிப்பகுதிகளில் நன்கு படுமாறு டைக்குளோர்வாஸ் (100 EC) 0.02%, (அ) மாலத்தியான் 50 EC 0.05% (1 மி.லி/லி) (அ) குயினால்பாஸ் 0.05% (அ) பாஸலோன் 0.05% இவற்றில் ஏதேனும் ஒன்றைத் .
உயிரியல் முறை:
மெத்திலிட் மற்றும் பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் 1:8 என்ற விகிதத்தில் இலைகளின் அடிப்பாகத்தில் விடுவதால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
(அ) 3000 / ஹெ என்ற அளவில் விட வேண்டும்.
இந்த ஒட்டுண்ணிகளை கொண்டைப் பகுதியின் மேற்புறம் விட்டால் சிலந்தி போன்ற பூச்சி உண்ணிகள் அவசியம் ஏற்படும்.
எனவே இலையின் அடிப்பாகத்தில் இரசாயனத் தெளிப்பு செய்த பின் 3 வாரங்கள் கழித்து விட வேண்டும்.
யூலோபிட், பிராக்கிமேரியா, சாந்தோபிம்பிளா ஒட்டுண்ணிகள் கருந்தலைப் புழுவின் கூட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக