திங்கள், 11 டிசம்பர், 2023

பருத்திப் பயிரைத் தாக்கும் பருத்தி தண்டுக் கூன் வண்டு




பருத்திப் பயிரைத் தாக்கும்
பருத்தி தண்டுக் கூன் வண்டு

தாக்குதலின் அறிகுறிகள்

நில மட்டத்திற்கு சற்று மேலே தாக்கப்பட்டத்அடித்தண்டுகளில் முண்டுகள் போன்ற வீக்கம் காணப்படும்.
இளம் பயிர் வாடிக் காய்ந்துவிடும்.

கட்டுப்பாடு : பொருளாதார சேதார நிலை :10 சத சேதம்

எக்டருக்கு 30 கிலோ கார்போபியுரான் மருந்தினை மண்ணில் தூவ வேண்டும்.
நடவு செய்த 20 நாட்கள் கழித்து தூரைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.
அடி உரமாக தொழு எருவை எக்டருக்கு 25 டன் அல்லது வேப்பம் புண்ணாக்கு 250 கிலோவை தூவ வேண்டும்.
குளோர்பைரிஃபாஸ் 20EC (10மிலி/ 1 கிலோ விதைக்கு) மருந்து கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
குளோர்பைரிஃபாஸ் மருந்து (2.5 மிலி/ லிட்டர்) கலந்து விதைத்த 15 மற்றும் 30 ஆம் தூரைச் சுற்றி ஊற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக