விருதுநகர்: வரத்து காரணமாக லயன் துவரம் பருப்பு ₹1,000 வரை விலை சரிந்துள்ளது. உளுந்தம்பருப்பு ₹300 வரை குறைந்துள்ளது.
விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம் (அடைப்பிற்குள் கடந்த வார விலை நிலவரம்): கடலை எண்ணெய் 15 கிலோ ₹2,600 (₹2,650), நல்லெண்ணெய் ₹5,775, பாமாயில் ₹2,130, முண்டு வத்தல் 100 கிலோ ₹7 ஆயிரம் முதல் ₹9 ஆயிரம், நாடு வத்தல் ₹10 ஆயிரம் முதல் ₹12 ஆயிரம், குண்டூர் ஏசி வத்தல் ₹13 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம், மல்லி லயன் 40 கிலோ ₹3,600 முதல் ₹3,700(₹3,450 முதல் ₹3,600), மல்லி நாடு ₹3,800 முதல் ₹4600(₹4 ஆயிரம் முதல் ₹4,300), துவரம் பருப்பு 100 கிலோ நாடு புதுசு ₹10,500 (₹10,700), துவரம் பருப்பு நயம் லயன் ₹10,200 முதல் ₹10,800(₹11,100 முதல் ₹12 ஆயிரம்), உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ ₹11,200(₹11,500), உருட்டு உளுந்தம் பருப்பு பர்மா ₹10,100, தொலி உளுந்தம்பருப்பு நாடு ₹9,400, பாசிப்பருப்பு 100 கிலோ ₹9,850 முதல் ₹10,000, கடலை புண்ணாக்கு 100 கிலோ ₹4,600, எள் புண்ணாக்கு 50 கிலோ ₹2,100, பட்டாணி பருப்பு 100 கிலோ ₹4,800, உளுந்து நாடு 100 கிலோ ₹7,200 முதல் ₹7,700, உளுந்து லயன் ₹8,200 முதல் ₹8,600, பாசிப்பயறு நாடு ₹7,950 முதல் ₹8,150, பாசிப்பயறு லயன் மீடியம் ₹6,800 முதல் ₹7 ஆயிரம், பாசிப்பயறு லயன் பாலிஷ் ₹9,300, மசூர் பருப்பு உடைத்தது ₹10,100, மசூர் பருப்பு பருவட்டு ₹15,000 என விற்பனையானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக